கஞ்சாவை வழக்கமாக்கும் அமெரிக்கா!

கஞ்சா பயன்பாடு குறித்த கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்த முடிவெடுத்துள்ளது. கஞ்சாவை குறைந்த ஆபத்து கொண்ட போதைப் பொருள் என மறுவகைப்படுத்த ஜோபைடன் தலைமையிலான அரசு முன்மொழிந்துள்ளது.
கஞ்சா பயன்படுத்தியதற்காக யாரும் சிறையில் இருக்கக் கூடாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். இதனால் அமெரிக்காவில் இனிமேல் கஞ்சா பயன்படுத்துவது அதிகாரப்பூர்வமாக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.