ஓ.டி.டியில் வெளியாகும் Lal Salaam! தொலைந்து போன ஹார்ட் டிஸ்க் கிடைச்சிருச்சு ???? | Aishwarya | Rajinikanth
ஓ.டி.டியில் வெளியாகும் Lal Salaam! தொலைந்து போன ஹார்ட் டிஸ்க் கிடைச்சிருச்சு ???? | Aishwarya | Rajinikanth
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் லால் சலாம். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில் விஷ்ணு விஷால் ,விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தனர். மேலும் இதில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்தப் திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.
லால் சலாம் படம் தோல்வியுற்றதன் காரணம்!
80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் வெறும் 17 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்தது. மேலும் இதைப்பற்றி ஒரு பேட்டியில் பேசி இருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த லால் சலாம் படம் சரியாக ஓடாததற்கு காரணம், இந்த படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க் தொலைந்து விட்டது. அதனால் முக்கியமான சில காட்சிகளை இணைக்க முடியவில்லை. அதுதான் இந்த படத்தின் தோல்விக்கு காரணம், அந்த காட்சிகளை இணைத்து இருந்தால் நாங்கள் சொல்ல வந்ததை இன்னும் தெளிவாக படத்தில் சொல்லி இருப்போம் என்று ஐஸ்வர்யா ரஜினி கூறி வந்தார். அதோடு அந்த ஹார்ட் டிஸ்க் கிடைத்த பிறகுதான் லால் சலாம் படத்தை ஓடிடியில் வெளியிடுவோம் என்றும் தெரிவித்திருந்தார்.
தொலைந்து போன ஹார்ட் டிஸ்க் கிடைச்சிருச்சு! OTT - யில் லால் சலாம்!
இந்நிலையில், சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்துள்ள பேட்டியில், ' தொலைந்து போன ஹார்ட் டிஸ்கில் இருந்து சில காட்சிகளை மீட்டுள்ளோம். அதை வைத்து மீண்டும் எடிட் செய்து ஒரு புதிய லால் சலாமை உருவாக்கி வருகிறோம். அது கூடிய விரைவில் ஓ.டி.டி.யில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். மேலும் திரையரங்கில் வெளியானதை விட ஓ.டி.டி.யில் வெளியாகும் லால் சலாம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும், அது நான் எடுக்க நினைத்த படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.