கட்சியை கலைக்கும் ஜெகன்மோகன்?

Jun 26, 2024 - 23:38
Sep 9, 2024 - 22:59
 20
கட்சியை கலைக்கும் ஜெகன்மோகன்?
கட்சியை கலைக்கும் ஜெகன்மோகன்?

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் ஆந்திர முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தனது கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து விடலாமா என்று தீவிரமாக ஆலோசிப்பதாகக் கூறப்படுகிறது.

அண்மையில் நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில்175 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி,11 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. மக்களவைத் தேர்தலில்இக்கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் மட்டுமேவெற்றி பெற்றது.

இது ஜெகன்மோகன் ரெட்டிக்கும், அவரது கட்சியினருக்கும் மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. இப்படி, சொத்து குவிப்பு வழக்கு, தேசிய கட்சிகளின் ஆதரவின்மை, மக்களவை தேர்தலில் ஜெகனுக்கு எதிராக ஷர்மிளா செய்த பிரச்சாரத்தால் ஏற்பட்ட அவப்பெயர், என இவர் கட்சியை கலைக்கும் சூழல் தான் ஏற்பட்டுள்ளது.

அதாவது, ஆந்திர காங்கிரஸ் தலைவராக பதவி வகிக்கும் தங்கை ஷர்மிளாவை நீக்கிவிட்டு தன்னை மாநில தலைவராக்கினால் தனது கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸிஸ் இணைய தயார் என ஜெகன் உறுதி அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.