இந்த கோவில்களில் மட்டுமே அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும்!

2,500-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் பணியிடம் காலி

May 14, 2025 - 17:55
 2
இந்த கோவில்களில் மட்டுமே அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும்!

இந்த கோவில்களில் மட்டுமே அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும்!

ஆகம விதிகளுக்கு உட்படாத கோயில்களில் மட்டுமே அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு புதிய நிபந்தனையை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்

ஆகம விதிகளுக்கு முரணாக கோயில்களில் அர்ச்சகர்கள் மற்றும் பிற ஆகம சம்பந்தப்பட்ட பணியாளர்களை நியமிக்கவோ அல்லது தேர்வு செய்யவோ சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் உட்பட சில அமைப்புகள் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.

தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், “தமிழகத்தில் 2,500-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஏற்கெனவே அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்என கோரப்பட்டது.

அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் குமணன், “தமிழ்நாட்டில் குறைந்த அளவில் தான் ஆகம விதிக்குட்பட்ட கோயில்கள் உள்ளன. அப்படிப்பட்ட ஸ்ரீரங்கம் போன்ற ஆகம விதிக்குட்பட்ட கோயில்களை தவிர்த்து, ஆகம விதிக்கு உட்படாத கோயில்களில் நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ”ஆகம விதிக்கு உட்படாத கோயில்களில் மட்டுமே அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும்.

அடுத்த மூன்று மாதங்களுக்கு உள்ளாக தமிழத்தில் ஆகம விதிக்குட்பட்ட கோயில்கள் மற்றும் ஆகம விதிகளுக்கு உட்படாத கோயில்கள் எத்தனை என்று தமிழக அரசு அடையாளம் காண வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ராமேஸ்வரம் கோவிலில் காலியாக உள்ள அர்ச்சகர்கள், மணியம் ஆகிய பணியிடங்களை தமிழக அரசு நிரப்பவும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி, வழக்கு விசாரணையை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்