திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு - சந்திரபாபு நாயுடு அதிரடி! Chandrababu Naidu | Tirupati Laddu
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு - சந்திரபாபு நாயுடு அதிரடி! Chandrababu Naidu | Tirupati Laddu
உலகம் முழுவதும் பிரபலமான திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் அங்கு வரும் பக்தர்கள் அனைவரும் அங்கு விற்பனை செய்யும் பிரசாத லட்டுக்களை தவறாமல் வாங்கி செல்வார்கள். அந்த வகையில் நாளொன்றுக்கு மூன்று லட்சம் லட்டுகள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது
சந்திரபாபு நாயுடு வைத்த குற்றசாட்டு!
இந்த நிலையில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பக்தர்கள் புனிதமானதாக கருதும் திருப்பதியின் பிரசாதமான லட்டுக்களில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டது என்று குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். மேலும் முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் தான் இப்படிப்பட்ட அநியாயம் நடந்தது. மேலும் அங்குள்ள பிரசாதங்கள் அனைத்தும் தரமற்று இருந்தது. இப்படி கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை மதிக்காததை கண்டு ஜெகன்மோகனும், அவரது கட்சியும் அவமானப்பட வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார்.
திருப்பதி லட்டுகளில் விலங்கு கொழுப்பு - பக்தர்கள் அதிர்ச்சி!
மேலும் இந்த புகாரை தொடர்ந்து, திருப்பதி லட்டு தொடர்பான ஆய்வு அறிக்கையும் வெளியானது. அதில், திருப்பதியில் விற்கப்படும் லட்டுகளில் மீன் எண்ணெய், விலங்கு கொழுப்பு ஆகியவற்றின் தடயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை பக்தர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.