அமைதியான தீர்வுக்கு இதுதான் வழி!

Sep 24, 2024 - 12:53
 6
அமைதியான தீர்வுக்கு இதுதான் வழி!

ரஷ்யா - உக்ரைன் மோதலுக்கு, நீடித்த தீர்வு காண தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

நியூயார்க்கில் .நா சபை மாநாட்டிற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.  

இதனிடையே, பிரதமரின் சமீபத்திய உக்ரைன் பயணத்தை நினைவுகூர்ந்த இரு நாட்டு தலைவர்களும், இருதரப்பு உறவுகளை தொடர்ந்து வலுப்படுத்துவது குறித்து திருப்தி தெரிவித்தனர்.

ரஷ்யா-உக்ரைன் மோதலில் பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வுக்கு ஆதரவாக இந்தியாவின் தெளிவான, நிலையான மற்றும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார்.

ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு, நீடித்த மற்றும் அமைதியான தீர்வை எளிதாக்க இந்தியா தனது வழிமுறைகளுக்குள் அனைத்து ஆதரவையும் வழங்க தயாராக உள்ளதாகவும் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும், உக்ரைன் நிலைமை மற்றும் அமைதிக்கான பாதையில் முன்னேறுவதற்கான வழிகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டன.