பிரதமருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை!

Sep 25, 2024 - 18:15
 3
பிரதமருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை!

விவசாயிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் பிரதமர் மோடி மீண்டும் மன்னிப்பு கேட்க நேரிடும் என ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய ராகுல்காந்தி விவசாயிகளுக்கு எதிரான பாரதிய ஜனதாவின் எந்த சதியையும் இந்தியா அனுமதிக்காது, விவசாயிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் மோடி மீண்டும் மன்னிப்பு கேட்க நேரிடும் எனவும்,

700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்த் தியாகம் செய்த பிறகும் பாஜகவினர் திருப்தி அடையவில்லைஎனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், 3 வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வர அரசு திட்டம் எனத் தகவல் வெளியான நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.