நாம் தமிழர் என்ற பெயரை சட்டப்படி சீமான் பயன்படுத்தக்கூடாது - ஆர்.எஸ். பாரதி

சீமான் போர்ஜரி வேலை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி விமர்சித்துள்ளார்

Jan 22, 2025 - 15:07
 1

நாம் தமிழர் என்ற பெயரை சட்டப்படி சீமான் பயன்படுத்தக்கூடாது - ஆர்.எஸ். பாரதி 

நாம் தமிழர் கட்சி சீமானுடையது இல்லை எனவும், சீமான் போர்ஜரி வேலை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி விமர்சித்துள்ளார்.

நெல்லை ஜோதிபுரம் திடலில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் பொதுகூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, நாம் தமிழர் என்ற பெயரை சட்டப்படி சீமான் பயன்படுத்தக்கூடாது. என்றும் வழக்கு தொடர்ந்தால் சீமான் கட்சியே நடத்த முடியாது எனவும் பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், நாம் தமிழர் என்ற கட்சியை முன்னதாகவே சி.ப.ஆதித்தனார் துவக்கி நடத்தியதாகவும்,

1967 தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் திமுக வின் ஆதரவோடு போட்டியிட்டார். அப்போது வரை நாம் தமிழர் கட்சி இருந்தது.

அதற்கு பின்னால் அப்போது சபாநாயகராக அண்ணா அமர்த்தினார் , பின்னர் 1969ல் கருணானிதி முதலமைச்சராக இருந்த போது சி.ப ஆதித்தனார் நாம் தமிழர் கட்சியை திமுகவில் இணைத்துவிட்டார்.

அப்போதே கட்சியும் கலைக்கப்பட்டு விட்டது என தெரிவித்துள்ளார்.