என்.டி.ஏ சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த பிரதமர் மோடி
ஊழல்கறை இல்லாத எளிமையான வாழ்க்கை வாழ்கிறவர்

என்.டி.ஏ சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த பிரதமர் மோடி
என்.டி.ஏ கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
சி.பி. ராதாகிருஷ்ணனை வேட்பாளராக முன்மொழிந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார் பிரதமர் மோடி.
மனு தாக்கல் செய்த போது, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதோடு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக சார்பில் எம்.பி தம்பிதுரை ஆகியோறும் பங்கேற்றிருந்தனர்.
வரும், செப்.9ம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாளை வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சி.பி.ராதாகிருஷ்ணன் சர்ச்சைகளுக்கு ஆளாகாத, பணிவும் பண்புமான மனிதர் எனவும், ஊழல்கறை இல்லாத எளிமையான வாழ்க்கை வாழ்கிறவர் அவரை அனைத்துக் கட்சியினரும் ஆதரிக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.