தேர்ச்சி பெறாத மாணவனைப் போன்றது காங்கிரஸ் - அமித்ஷா

Sep 25, 2024 - 18:40
 3
தேர்ச்சி பெறாத மாணவனைப் போன்றது காங்கிரஸ் - அமித்ஷா

அதிக மதிப்பெண்கள் எடுத்தாலும் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவனைப் போன்றது காங்கிரஸ் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது இந்த நிலையில், மும்பையில் பாஜக தொண்டர்கள் மத்தியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பாக பேசினார்.

அப்போது, பேசிய அவர்  இரண்டு மாணவர்கள் இருக்கிறார்கள். ஒருவர் படிப்பில் சிறந்தவர் அவர் ஒவ்வொரு தேர்விலும் 90% மதிப்பெண்கள் பெறுவார். மற்றவர் 20 முதல் 25 சதவீத மதிப்பெண்கள் பெறுவார். ஆனால், ஒரு தேர்வில் 90 முதல் 95 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவருக்கு 80 சதவீதமும், 20 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் 30 சதவீதமும் கிடைத்தது. ஆனால், 30 சதவீத மதிப்பெண்கள் எடுத்த மாணவர், இன்னும் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

அந்த 30 சதவீதம் பெற்ற மாணவர் தான் காங்கிரஸ் கட்சி. எனவே பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்என கூறியுள்ளார்.