சிறையிலிருந்து வெளியே வந்த சவுக்கு சங்கர்! Savukku Shankar Press Meet

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், மதுரை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்

Sep 26, 2024 - 18:17
 14

சவுக்கு சங்கர் ஜாமினில் விடுதலை!

பெண் போலீசார் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது  செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு தொடரப்பட்டு தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். பின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கரின் தாயார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில்,  தற்போது சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்ட உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தும், அவர் மீது வேறு வழக்குகள் நிலுவையில் இல்லை என்றால், அவரை உடனடியாக ஜாமினில் விடுதலை செய்யவும்  உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சவுக்கு சங்கரின் அதிரடி பேட்டி!

மதுரை சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் சவுக்கு சங்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பல விஷயங்களை கூறியிருக்கிறார். அதில் , கோவை சிறையில் எனது கையை உடைத்தனர். மேலும் எனக்கு மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி திமுக அரசுக்கு எதிராக பேசக்கூடாது என்றும் அரசுக்கு ஆதரவாகப் பேச வேண்டும் என்றும் ஒவ்வொரு முறையும் போலீசார் என்னை  வலியுறுத்தினர் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஐந்து மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்துள்ளேன் என்றாலும் ஏற்கனவே இருந்த வீரியத்துடன் மீண்டும் செயல்படுவேன் என  தெரிவித்துள்ளார்.