F.I.R தமிழில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்!

வழக்கறிஞருக்கு மட்டுமே உரிமை இருக்க வேண்டும்

May 14, 2025 - 15:33
May 14, 2025 - 15:36
 4
F.I.R தமிழில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்!

F.I.R தமிழில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்!

புதுச்சேரியில் முதல் தகவல் அறிக்கை (எஃப்..ஆர்) தமிழில் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தியது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனுடன் மே 13-ஆம் தேதி டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமைச் செயலாளர் சரத் சவுகான், டிஜிபி ஷாலினி சிங் மற்றும் புதுச்சேரி மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்

அப்போது, காவல்துறை, சிறைச்சாலைகள், நீதிமன்றங்கள் தொடர்பான முக்கிய விதிகள் மற்றும் தற்போதைய நிலை குறித்து விவாதம் நடைபெற்றது.

பிரதமர் மோடியின் தலைமையில் கொண்டுவரப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்களைச் செயல்படுத்துவதில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் சிறப்பாகப் பணியாற்றியுள்ளது.

புதுச்சேரியில் முதல் தகவல் அறிக்கை (எஃப்..ஆர்) தமிழில் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும்.

தேவைப்படுபவர்களுக்கு பிற மொழிகளில் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

கைது செய்யப்பட்ட அனைத்து குற்றவாளிகளின் கைரேகைகளும் தேசிய தானியங்கி கைரேகை அடையாள அமைப்பின்  கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.

எந்தவொரு வழக்கிலும் சட்ட ஆலோசனை வழங்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு மட்டுமே உரிமை இருக்க வேண்டும்.

மின்னணு சம்மன்கள் போன்ற விதிகள் விரைவில் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும்.

புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக, புதுவை தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் வாரத்திற்கு ஒரு முறையும், மாநில உள்துறை அமைச்சர் 15 நாட்களுக்கு ஒருமுறையும், துணை நிலை ஆளுநர் மாதத்திற்கு ஒருமுறையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று அமித்ஷா தெரிவித்தார்.