திமுகவை பகிரங்கமாக குற்றம்சாட்டிய அமித்ஷா!
திமுகவினர் பிரிவிணையை ஏற்படுத்தும் வகையில் முயற்சிக்கின்றனர்

திமுகவை பகிரங்கமாக குற்றம்சாட்டிய அமித்ஷா!
மொழியின் பெயரால் திமுக நாட்டை துண்டாடுகிறது என மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
அனைத்து மொழிகளுமே இந்தியாவினுடைய அலங்கரிக்கப்பட்ட கிரீடமாக கருதப்படுகிறது.
இப்படி இருக்கையில் ஒரு மொழியை வைத்து திமுகவினர் பிரிவிணையை ஏற்படுத்தும் வகையில் முயற்சிக்கின்றனர்.
குறிப்பிட்ட மாநில அரசின் ஊழலை மறைப்பதற்கு தான் மொழி பிரச்சனையை கையில் எடுக்கின்றனர்.
மத்திய அரசு தென்னிந்திய மொழிகளுக்கு எதிரானது என்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தவே திமுக முயற்சிக்கிறதா என அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
வெகுதொலைவில் உள்ள அந்நிய மொழியை விரும்புகிறீர்கள் ஆனால், இந்திய மொழியை எதிர்க்கிறீர்கள் எனவும், இவ்வளவு பேசும் தமிழ்நாடு அரசு தமிழில் மருத்துவம் மற்றும் பொறியியல் எழுத்து தேர்வுகளையும் அவர்கள் அந்தந்த தமிழ் மொழியில் ஏன் நடத்தவில்லை என அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
மொழியின் பெயரில் திமுக அரசு கடுமையான விஷத்தை மக்களிடையே பரப்பி வருகிறது.
மற்ற மொழிகளை போல எல்லா மொழிகளுக்கும் இந்தியாவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.