நடிகை பார்வதி நாயர் பரபரப்பு குற்றச்சாட்டு!

Oct 2, 2024 - 15:50
Oct 3, 2024 - 12:09
 2
நடிகை பார்வதி நாயர் பரபரப்பு குற்றச்சாட்டு!

நீதிமன்ற தடை உத்தரவை மீறி தன்னிடம் உதவியாளராக பணியாற்றிய சுபாஷ் தன்னை மிரட்டி வருவதாக நடிகை பார்வதி நாயர் பரபரப்புத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

2022ல் தனது வீட்டில் இருந்த18 லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருள்கள் திருடு போனதாக தான் தந்த புகாரை திரும்ப பெறும்படி சுபாஷ் தனக்கு மிரட்டல் விடுத்ததோடு, தனக்கெதிராக காவல் நிலையத்திலும் பொய்யான புகார் அளித்தார் என்றும் தொடர்ந்து தன்னுடைய தனிப்பட்ட வெளிவராத புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டும், பெயரை அவமதிக்கும் வகையில் பல பொய் செய்திகளை வெளியிட்டும் வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஏற்கனவே, சுபாஷ் தன்னை பற்றி பேச சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்த போதிலும், உத்தரவுகளை மீறி சுபாஷ் தன்னை பற்றி, அவதுறான, தகவல்களை சமூக ஊடகங்களுக்கு வழங்கி வருவதாகவும், வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், தனது வீட்டில் சுபாஷ் சாதி ரீதியாக நடத்தப்பட்டதாக 10 லட்ச ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பப் பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும்,. சுபாஷ் மீதான புகாரை திரும்ப பெற்று, 2 கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனவும், கொலை மிரட்டலும் விடப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.