போக்சோ கைதிக்கு தேசிய விருது?
போக்சோவில் கைதான நடன இயக்குனர் ஜானி ,மாஸ்டருக்கு தேசிய விருது வழங்கும் விழாவை காரணம் காட்டி இடைக்கால ஜாமீன் வழங்கிய விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தெலுங்கு மற்றும் தமிழ் திரைத்துறையில் முன்னணி நடனக்கலைஞராக வலம் வரும் ஜானி மாஸ்டர் திருச்சிற்றம்பலம் படத்தில் மேகம் கருக்காதா பாடலுக்காக தேசிய விருதுக்கு தேர்வானார்.
அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து வந்து கொண்டிருந்த நிலையில், ஜானி மாஸ்டர் போக்சோ வழக்கில் கைதானார்.
இதனிடையே தான் இவருக்கு தேசிய விருதும் தேர்வானது. போக்சோ வழக்கில் கைதானவருக்கு எப்படி தேசிய விருது என விமர்சனங்களும் எழுந்து வந்த இந்த சூழலில் தான் போக்சோ வழக்கில் கைதான ஜான் மாஸ்டரை தேசிய விருது விழாவில் கலந்து கொள்ள ஏதுவாக ரெங்கா ரெட்டி நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கியுள்ளது.
மேலும், ஜானி மாஸ்டரின் பிணைக்காக 2 பேர் 2 லட்சம் ரூபாய் ஜாமீன் தொகையாக வழங்க வேண்டுமெனவும், பிணையில் செல்லும் ஜானி மாஸ்டர் எவ்வித பேட்டியும் கொடுக்க கூடாதெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு இணையவாசிகள் பலறும் கடும் அதிர்ப்தி தெரிவித்து விமர்சித்து வருகின்றனர்.