சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு நிதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Oct 5, 2024 - 01:44
 3
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு நிதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு நிதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு நிதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2007-ல் தொடங்கிய மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல்கட்ட சேவைகள் 2015-ல் தொடங்கப்பட்டன. 2-ம் கட்ட திட்டம் 2016-ல் தொடங்கப்பட்டது. இதில் மாதவரம்-சிப்காட், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி, மாதவரம்-சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்படுகின்றன. மத்திய அரசின் 50% பங்களிப்புடன் ரூ.63,246 கோடி மதிப்பிலான இந்த திட்டம் 2027-ல் நிறைவடையும். 118.9 கி.மீ. தொலைவுக்கு 128 ரயில் நிலையங்களுடன் மெட்ரோ பாதை அமைக்கப்படும். விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயில் விரிவாக்கம் செய்யப்படும் என மெட்ரோ அதிகாரிகள் தகவல். இதற்காக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.