இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினம் இன்று!

Sep 18, 2024 - 23:41
 6
இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினம் இன்று!

இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினம் இன்று!

தமிழகத்தில் மாபெரும் சமூக நீதிப் புரட்சிக்கு வித்திட்டவரும், சமுதாயத்தில் நிலவிய பெரும்பாலான ஏற்றத் தாழ்வுகளை சட்டரீதியாகக் களைந்தவர் ஐயா இரட்டைமலை சீனிவாசன். இவர் தீண்டாமை ஒழிப்பு, ஜாதிப் பாகுபாடு ஒழிப்பு, ஆலய நுழைவுப் போராட்டம், இட ஒதுக்கீடு, நில உரிமை என பல்வேறு சமூக நீதிப் போராட்டங்களை முன்னெடுத்தவர்.மேலும் அண்ணல் அம்பேத்கர், மகாத்மா காந்தி, அயோத்திதாசர் எனப் பல தலைவர்களுக்கும் முன்னோடியாக இருந்தவர். அதுமட்டுமின்றி நிலமற்றவர்களுக்காக, பஞ்சமி நிலம் வழங்கப்பட்டதில் முக்கியப் பங்கு வகித்தவர். பட்டியல் சமூக மக்களின் முன்னேற்றம் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்துக்காக அயராது உழைத்த ஐயா திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினம் இன்று!