அரசு பேருந்துகளுக்கு அறிவுறுத்தல்!

Oct 14, 2024 - 23:41
 10
அரசு பேருந்துகளுக்கு அறிவுறுத்தல்!

பேருந்துகளின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரில் ஒருவர் நிரந்தர பணியாளர்களாக இருக்க வேண்டும் என மாநகர போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

மாநகர போக்குவரத்துக் கழகத்தினால் சென்னையில் தினமும் 3 ஆயிரத்து 233 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆள் பற்றாக்குறைகளை ஈடுசெய்ய, தற்காலிக ஓடடுநர், நடத்துநர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக விபத்துகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விபத்துக்கு உள்ளாகும் பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துநர் இருவரும் தற்காலிக பணியாளர்கள் என்பதால், விபத்து நடந்தவுடன் அதன் உண்மைத் தன்மை அறிவது கடினமாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், விபத்துகள் ஏற்படா வண்ணம், பாதுகாப்பாக பேருந்தை இயக்க, அனைத்து பணிமனை கிளை மேலாளர்களும் தங்களது பணிமனையில் உள்ள தற்காலிக ஓட்டுநர், நடத்துநர்களை ஒரே பேருந்தில் பணியமர்த்தாமல், இருவரில் ஒரு நிரந்தர பணியாளரை பணியமர்த்தி பேருந்தை இயக்க உத்தரவிட்டுள்ளது.