கேரளாவை பதற வைத்த கொள்ளை சம்பவம்! மூன்று ஏ.டி.எம்.களில் 65 லட்சம் ???? Kerala | Tamilnadu Police | ATM Robbery | Thrissur

Sep 27, 2024 - 20:23
Sep 27, 2024 - 23:57
 30
கேரளாவை பதற வைத்த கொள்ளை சம்பவம்! மூன்று ஏ.டி.எம்.களில் 65 லட்சம் ???? Kerala | Tamilnadu Police | ATM Robbery | Thrissur

கேரளாவை பதற வைத்த கொள்ளை சம்பவம்!  மூன்று ஏ.டி.எம்.களில் 65 லட்சம் ???? Kerala | Tamilnadu Police | ATM Robbery | Thrissur

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்திலுள்ள நகர்ப்புற பகுதியை சுற்றியுள்ள மூன்று ஏ.டி.எம். களில் அடுத்தடுத்து  கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. மேலும் இந்தக் கொள்ளை சம்பவத்தில் மூன்று ஏ.டி. எம்.களில் இருந்து 65 லட்சம் மதிப்பிலான பணத்தை மர்ம நபர்கள்  கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்குள்ள தடயங்களை சேகரித்து, இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வந்தனர். அதுமட்டுமின்றி போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இன்று அதிகாலை  3 மணி முதல் 4 மணி வரையிலான ஒரு மணி நேர இடைவேளையில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் ஏ.டி.எம். மையத்திற்கு முகமூடி அணிந்து வந்து,  கேஸ் கட்டிங் மூலம் ஏடிஎம்களை வெட்டி எடுத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர் என்பதும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதே சமயம் இந்த கொள்ளை சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிற கார் ஒன்றும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இது தொடர்பாகவும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

சினிமா பாணியில் கொள்ளையர்களை பிடித்த தமிழ்நாடு போலீஸ்!

இந்த நிலையில், கேரளா ஏடிஎம்களில்  கொள்ளையடித்த ராஜஸ்தான் கொள்ளையர்களை நாமக்கல் குமாரபாளையம் அருகே சினிமா பாணியில் 30 இருசக்கர வாகனத்தில் துரத்தி சென்று தமிழ்நாடு போலீசார் பிடித்துள்ளனர். அப்பொழுது அவர்கள் தப்பி சென்ற கண்டைனர் லாரியை திறக்கும் போது உள்ளே ஆயுதங்களுடன் இருந்த கொள்ளையர்கள் போலீசாரை தாக்க, போலீசார் பதிலுக்கு துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். அந்த துப்பாக்கி சூட்டில் கொள்ளையனில் ஒருவர் பலி மற்றும் ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.

அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்! ஏராளமான பணம் பறிமுதல்!

மேலும், அந்த கண்டெய்னருக்குள் கேரளாவில் கொள்ளையடிக்கப்பட்ட ₹65 லட்சம் பணம் மட்டுமன்றி ஏடிஎம் இயந்திரம், ஏராளமான பணம், பதிவெண் இல்லாத கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.