மறைந்தார் டெல்லி கணேஷ்! அவருடைய அழகிய வாழ்க்கை பயணம் ❤️ Actor Delhi Ganesh | Delhi Ganesh | Delhi Ganesh RIP

Nov 11, 2024 - 13:26
 8
மறைந்தார் டெல்லி கணேஷ்! அவருடைய அழகிய வாழ்க்கை பயணம் ❤️ Actor Delhi Ganesh | Delhi Ganesh | Delhi Ganesh RIP

மறைந்தார் டெல்லி கணேஷ்! அவருடைய அழகிய வாழ்க்கை பயணம் ❤️  Delhi Ganesh | Delhi Ganesh RIP

மறக்க முடியுமா... என்ற வரிகளுக்கு ஏற்றது போல் சில நடிகர்கள் இந்த உலகத்தை விட்டு சென்றாலும் அவர்களை நம் தினமும் சினிமாவில் கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறோம். அப்படி இனிமேல் நம் ரசிக்க போகும் பழம்பெறும் தமிழ் நடிகர் தான் டெல்லி கணேஷ். இவர் வயது மூப்பு காரணமாக நவம்பர் ஒன்பதாம் தேதி இரவு 11 மணி அளவில் உயிரிழந்தார். இவருடைய இறப்பு சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால், நாம் ரசித்துப் பார்த்த அனைத்து படங்களிலும் இவருடைய கதாபாத்திரம் இருக்கும். அந்த அளவிற்கு, ஹீரோ, வில்லன், நண்பன், காமெடியன் என அனைத்து கதாபாத்திரங்களிலும் அருமையாக நடித்து நம் மனதை கவர்ந்திருப்பார். அதுமட்டுமின்றி கமல்ஹாசன், ரஜினியில் ஆரம்பித்து சிவகார்த்திகேயன் சூர்யா வரையிலும் அனைத்து நடிகர்களுடனும் இவர் பணியாற்றி இருக்கிறார். மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என  400 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.  

நடிகர் டெல்லி கணேசன் பிறப்பு!

நடிகர் டெல்லி கணேஷ் 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி பிறந்தார். பின் டி.வி.எஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து இந்திய விமானப்படையில் சேர்ந்துள்ளார். அப்போது, வீரர்கள் முகாம்களில் நாடகம் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த நிலையில், அந்த நாடகங்களில் டெல்லி கணேஷ் நடித்து வந்தார். அதன் பிறகு தமிழ்நாடு திரும்பிய டெல்லி கணேஷ், சினிமா மீது இருந்த தீராத காதலினால், 1976 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் ‘பட்டின பிரவேசம்’ திரைப்படம் மூலம் திரை பயணத்தை தொடங்கினார். அதுமட்டுமின்றி கணேஷாக இருந்த அவர் பெயரை டெல்லி கணேஷ் என மாற்றியதும் கே. பாலச்சந்தர் தான்!

நடிகர் டெல்லி கணேஷ் வாங்கிய விருதுகள்!

1979 - பசி திரைப்படத்திற்கு "தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த  நடிகருக்கான" விருதை வாங்கியுள்ளார். பிறகு  தமிழ்நாடு மாநில அரசு அவருக்கு  "கலைமாமணி விருது" கொடுத்து கௌரவித்துள்ளது.

நடிகர் டெல்லி கணேசின்  கடைசி நொடிகள்!

நடிகர் டெல்லி கணேஷ் இறப்பிற்கு கமல்ஹாசன், ரஜினிகாந்த், சீமான், வடிவேலு உள்ளிட்ட திரை பிரபலங்களும், பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்திய விமான படையினரும் நடிகர் டெல்லி கணேஷுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.