மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் தலைவர் வி.கே.டி பாலன் காலமானார்! Who is V.K.T.Balan? Real Life Story | Madura Travels Owner Thanabalan Success Story

மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் தலைவரான வி.கே.டி.பாலன் உடல் நலக்குறைவால் காலமானார்.

Nov 12, 2024 - 17:59
 24

வி.கே.டி. பாலன் யார் தெரியுமா?

வி.கே.டி. பாலன் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில்1954 ஆம் ஆண்டு பிறந்தார். பின் அவருடைய சிறு வயதிலேயே சென்னை சென்றுவிட்டார். அங்கு பல வேலைகள் தேடியும் கிடைக்காமல், உணவு,  இருப்பிடம் இன்றி தவித்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து விசாவுக்காக அமெரிக்க தூதரகத்திற்கு செல்வோருக்காக இடம் பிடித்துக் கொடுப்பது, விசா எடுத்துக் கொடுப்பது என்று வேலை செய்து பணம் சம்பாதித்து  இருக்கிறார். அந்த  இடத்தில் தான் டிராவல் துறையை சேர்ந்த பலரின் தொடர்பும் இவருக்கு கிடைத்திருக்கிறது. அதை வைத்துக்கொண்டு சொந்தமாக 1986-ம் ஆண்டு மதுரா டிராவல்ஸ் லிமிடெட் சர்வீஸ் நிறுவனத்தை  தொடங்கினார். பின் அவருடைய கடின உழைப்பினால்  டிராவல்ஸ் துறையின் முன்னோடியாகவும் திகழ்ந்து வருகிறார். மேலும் இந்த நிறுவனம்  சுற்றுலா பயணம், டிக்கெட் புக்கிங் தொடர்பான அனைத்து சேவைகளையும்  அளித்து வருகிறது. அதுமட்டுமின்றி, சுற்றுலா துறையில் சிறப்பான சேவையாற்றியதற்காக தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.

வி.கே. டி. பாலன் இறப்பு!

வி.கே. டி. பாலன் பல நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது காலமானார். இவருடைய இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.