பீகார் அரசியலில் வரலாற்று வெற்றி !
ஜேடியூ – பாஜக மிக பிரமாண்ட வெற்றி
பீகார் அரசியலில் வரலாற்று வெற்றி!
பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 200க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது.
பீகார் தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 200-க்கும் அதிகமான இடங்கள் பாஜக கூட்டணி வசமாகி இருக்கின்றன. பீகார் தேர்தல் வரலாற்றிலேயே ஜேடியூ – பாஜக முதல்முறையாக மிக பிரமாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளன.
பீகார் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத படுதோல்வியை ஆர்ஜேடியூவும், காங்கிரஸூம் சந்தித்துள்ளன. பீகாரில் பெண்களுக்கு கடன் உதவி வழங்கும் திட்டம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பரில் பீகாரில் மகிளா ரோஜ்கர் யோஜனா என்ற திட்டத்தை அறிவித்திருந்தார் பிரதமர் மோடி.
ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒரு பெண் சுய தொழில் தொடங்க ரூ10,000 கடனாக வழங்குவதுதான் இந்த திட்டம்.
