பிரதமர் மோடியின் பங்கேற்பு: பிரேசிலில் நடைபெற்ற ஜி20 மாநாடு | G20 Summit

Nov 19, 2024 - 14:43
 9
பிரதமர் மோடியின் பங்கேற்பு: பிரேசிலில் நடைபெற்ற ஜி20 மாநாடு | G20 Summit

பிரதமர் மோடியின் பங்கேற்பு: பிரேசிலில் நடைபெற்ற ஜி20 மாநாடு | G20 Summit

பிரதமர் மோடி ஐந்து நாள் சுற்றுப்பயணமாக உலக நாடுகளுக்கு சென்று உள்ளார். அவர் சமீபத்தில் பிரேசில் நடந்த ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டார். அந்த மாநாட்டில் பல உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். பிரேசிலுக்கு சென்றவுடன் பிரதமர் மோடி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் முக்கியமாக இந்த மாநாட்டில் அமெரிக்க பிரதமர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் பங்கேற்றனர். போர்கள் மற்றும் உலக நாடுகள் பிரச்சனைகளால் தெற்குலக நாடுகளே அதிகமாக பாதிக்கப்படுவதாக இம்மாநாட்டில் பிரதமர் மோடி கூறினார். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி இந்தியா சார்பில் தனது கருத்துக்களை கூறினார். கடந்த பத்து ஆண்டுகளில் 250 மில்லியன் மக்களை பசியின் பிடியிலிருந்து காப்பாற்றி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியாவில் சுமார் 80 கோடியும் மேல் மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்குவதாக பிரதமர் கூறினார். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பல உலகத் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.