Train Derailment In Oaxaca | மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டு விபத்து: 13 பேர் உயிரிழப்பு, 98 பேர் காயம்

Dec 29, 2025 - 11:58
 22
Train Derailment In Oaxaca | மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டு விபத்து: 13 பேர் உயிரிழப்பு, 98 பேர் காயம்

Train Derailment In Oaxaca | மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டு விபத்து: 13 பேர் உயிரிழப்பு, 98 பேர் காயம்

மெக்சிகோவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 13 பேர் உயிரிழந்ததுடன், 98 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பயணிகள் சென்ற ரயில் திடீரென தடம் புரண்டதையடுத்து இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

மெக்சிகோவின் தெற்கு மாகாணமான ஓக்சாகா பகுதியில் இயக்கப்பட்ட இன்டர்ஓசியானிக் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்து சென்று, காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 36 பேர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெயின்பாம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட தகவலின்படி, தொழில்நுட்பக் கோளாறு அல்லது ரயில் பாதையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த விபத்து மெக்சிகோ முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.