நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்...பார்வையிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள்!
நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்...பார்வையிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள்!
நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்...பார்வையிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள்!
போளூர் ஒன்றியம் அத்திமூர் ஊராட்சியில் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. அத்திமூர் வடகாடு மஞ்சள் ஆற்றில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தரைப்பாலம், பெரியகரம் கிராமத்தில் மழை நீர் அதிகமாக செல்லும் பகுதியில் சேதம் அடைந்த நெற்பயிர்களை தொகுதி பொறுப்பாளர் எ.வ.வே.கம்பன் ஆய்வு செய்தார்.
அப்போது பொதுமக்கள் பல்வேறு குறைகளை தெரிவித்து மனுக்கள் அளித்தனர். அந்த மனுக்கள் மீது உரிய அதிகாரிகள் இடம் தெரிவித்து நடவடிக்கை எடுத்து செய்து தரப்படும் என தெரிவித்தார்.
ஆய்வின்போது மாவட்ட அவைத்தலைவர் ராஜசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர், முன்னாள் எம்எல்ஏ கே.வி.சேகரன்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நரேஷ் குமார், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பாபு, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் , ஒன்றிய செயலாளர்கள் பேரூராட்சி தலைவர்,நகர செயலாளர், மாவட்ட பிரதிநிதிகள், போளூர் வேளாண் உதவி இயக்குனர் தாசில்தார் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.