தொழில்துறையில் ஏற்படும் சவால்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

2 நாள் கருத்தரங்கம்

Dec 17, 2024 - 17:30
Dec 17, 2024 - 17:55
 1
தொழில்துறையில் ஏற்படும் சவால்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

தொழில்துறையில் ஏற்படும் சவால்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

சென்னையில் பசுமைப் பொறியாளர்களின் தொழில்துறையில் ஏற்படும் சவால்களை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை பிரம்மோஸ் தந்தை என்று அழைக்கப்படும் பத்மபூஷன் Dr.சிவதாணு பிள்ளை அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டென்மார்க்,ஆல்போர்க் பல்கலைகழகத்தின், பயோ எனர்ஜி மற்றும் பொறியியல் துறை தலைவர் டாக்டர். ஜென்ஸ் போ ஹோல்ம் நீல்சன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இந்த மாநாட்டின் மூலம் தொழில்துறையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண 99 நாட்கள் என்ற திட்டத்தை உருவாக்கி அதை செயல்படுத்தப்பட உள்ளது.

குறிப்பாக, திட்ட சவால்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, நகர்ப்புற பசுமை இயக்கம், ஸ்மார்ட் நிலையான விவசாயம், பசுமை ஆற்றல் மற்றும் ஆற்றல் சேமிப்பு, சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம், கழிவு வளங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் செயல்முறை மேலாண்மை, எதிர்கால கல்வி மற்றும் ஸ்மார்ட் தொழில் முறிவு உள்ளிட்ட முக்கிய 9 சவால்களை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

மேலும், இந்த மாநாட்டில் 25 தொழில் நிறுவனங்களின் வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.