பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு!

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஒன்றிணைவோம் குரல் கொடுப்போம்

Dec 23, 2024 - 13:49
Dec 23, 2024 - 14:22
 7
பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு!

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு!


தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் மகளிர் திட்டம் சார்பில் தேசிய அளவிலான பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடைபெற்றது.

தேசிய அளவிலான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் இன்று டிசம்பர் 23 வரை அனுசரிக்கப்படுகிறது.

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஒன்றிணைவோம் குரல் கொடுப்போம்,

குழந்தை திருமணத்தை ஒழிப்போம் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம்,

பாலின சமத்துவத்தை ஆதரிப்போம் பாலின வன்கொடுமைக்கு எதிராக ஒன்றிணைவோம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மகளிர்கள் கையில் ஏந்தி பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார பேரணியில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன் தலைமை வகித்து கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியானது புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் வழியாக டி எம் எஸ் எஸ் வளாகத்திற்கு சென்று நிறைவடைந்தது.

இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர்கள் கலந்து கொண்டனர்.