தேசிய ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான அழகப்பா சிறப்பு மாணவர்கள்!

சிறப்பு ஒலிம்பிக் பாரத் தமிழ்நாடு கூட்டமைப்புக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்

Dec 21, 2024 - 18:49
Dec 21, 2024 - 19:00
 91
தேசிய ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான அழகப்பா சிறப்பு மாணவர்கள்!

தேசிய ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான அழகப்பா சிறப்பு மாணவர்கள்!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள சிறப்பு கல்வியியல் மற்றும் புனர்வாழ்வு அறிவியல் துறையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தடகள போட்டிகள் நடைபெற்றது.

அழகப்பா பல்கலைக்கழக சிறப்பு பள்ளி (அறிவுசார் குறைபாடு மற்றும் ஆட்டிசம்) சிறப்பு ஒலிம்பிக் பாரத் தமிழ்நாடுடன் இணைந்து மாநில அளவிலான தடகள போட்டிகளை நடத்தியது.

இந்த போட்டியினை அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் க. ரவி  அவர்கள் தலைமையேற்று துவங்கி வைத்தார்.

பின்னர் மாணவர்களிடம் சிறப்புரை ஆற்றிய இவர், மாணவர்களின் நலனில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் பெறும் பங்கு வகிக்கின்றனர்.

இம்மாணவர்களின் திறனை கண்டறிந்து அதற்கு ஏற்ற பயிற்சியினைத் தரும்பொழுது அவர்கள் சிறந்த நிலையினை அடைவார்கள் என்றும், இப் பல்கலைக்கழக சிறப்பு கல்வியியல் துறை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து அவர்களின் திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறதுனவும் கூறினார்.

மேலும், சிறப்பு ஒலிம்பிக் பாரத் தமிழ்நாடு கூட்டமைப்பு அழகப்பா பல்கலைக்கழகத்தில் இப் போட்டியினை நடத்தியமைக்காக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

ந்த போட்டியில் 23 மாவட்டங்களில் இருந்து 168 மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு தடகளப் போட்டியில் வெற்றி பெற்றனர்.

இப் போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ந்த போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர்கள் அடுத்த கட்டமாக தேசிய அளவிலான சிறப்பு ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

குறிப்பாக தேசிய அளவில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்கள் சர்வதேச அளவில் 2027 ஆம் ஆண்டு சவுத் அமெரிக்காவில் நடைபெறக்கூடிய தடகளப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் முக்கிய பங்காற்றிய திரு. பிரபாகரன், திரு. முத்துக்குமார், திரு. அடைக்கலம் மற்றும் குழுவினர், முனைவர். எ.செந்தில் ராஜன், முனைவர் சுஜாதா மாலினி, திரு.சுரேஷ் உள்ளிட்டோறுக்கு பல்கலைகழகத்தின் சார்பாக பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.