எம்.ஜி.ஆர்-உடன் மோடியை ஒப்பிட முடியாது – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

எம்.ஜி.ஆர்., தான் சாதி, சமயம், வேறுபாடு பார்க்கவில்லை

Dec 24, 2024 - 15:23
Dec 24, 2024 - 16:26
 10
எம்.ஜி.ஆர்-உடன் மோடியை ஒப்பிட முடியாது – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

எந்த நிலையிலும் எம்.ஜி.ஆருடன் பிரதமர் மோடியை ஒப்பிட முடியாது என்று அ.தி.மு.க., மாஜி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க., நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர்., நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் கருப்பு சட்டை அணிந்து பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,

எம்.ஜி.ஆர்., உடன் யாரையும் ஒப்பிட முடியாது. வரலாற்றில் முத்திரை பதித்த, யாருடனும் ஒப்பிட முடியாத தலைவர் என்றால் அது எம்.ஜி.ஆர்., தான். அவர் சாதி, சமயம், வேறுபாடு பார்க்கவில்லை, அதேபோன்று மத ரீதியான அரசியல் செய்யவில்லை எனவும்,

எம்.ஜி.ஆரை எல்லோருக்குமான தலைவர் என்று பலரும் பார்ப்பதை போல பிரதமர் மோடியை யாரும் பார்க்கின்றனரா? அவர் ஆட்சிக்காலத்தில் எவ்வளவோ திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. குறிப்பாக கூற வேண்டும் என்றால், சமூக நீதி அடிப்படையில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்.


சமத்துவம் பார்க்கின்ற இயக்கம் அ.தி.மு.க. ஆனால் அந்த சமநிலையை பா.ஜ., பார்க்கிறதா? சமநிலை எங்கே உள்ளது? எந்த நிலையிலும் அவருடன் பிரதமரை ஒப்பிடவே முடியாது.எனவும்

இதற்கு முன்னதாக அண்ணாமலை மோடியை எம்.ஜியார் என குறிப்பிட்டு பேசியதற்கு பதில் அளித்துள்ளார் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்.