ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

Dec 24, 2024 - 16:09
Dec 24, 2024 - 17:51
 9
ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

2025ம் ஆண்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விரும்புவோர், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

காளைகளுக்கு தேவையற்ற வலி மற்றும் கொடுமையைத் தவிர்த்து பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய வேண்டும்.

மாவட்ட கலெக்டரிடம், முன் அனுமதி பெறாத அமைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கூடாது.

போட்டிகளில் பங்கேற்கும் விலங்குகளுக்கு தேவையற்ற துன்பம் தரக்கூடாது.

ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் தேதிக்கு முன்பே அனைத்து ஏற்பாடுகளும் போட்டி நடக்கும் இடத்தில் ஏற்பாடு செய்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விரும்புவோர், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

அரசால் அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர வேறு, இடத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.