நிதிஷ்முகாருக்கும், நவீன் பட்நாயக்கிற்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் - கிரிராஜ் சிங்

மாநிலத்தை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றதில் முக்கிய பங்கு வகிப்பவர் நிதிஷ்குமார்

Dec 25, 2024 - 16:18
Dec 25, 2024 - 16:28
 4
நிதிஷ்முகாருக்கும், நவீன் பட்நாயக்கிற்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் - கிரிராஜ் சிங்

நிதிஷ்முகாருக்கும், நவீன் பட்நாயக்கிற்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் - கிரிராஜ் சிங்

பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோருக்கு, நாட்டின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

பீஹார் மாநிலத்தின் பெகுசராய் லோக்சபா தொகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கிரிராஜ் சிங்,


பா.ஜ., கூட்டணியில் உள்ள பீஹார் முதல்வர் நிதிஷ்குமாருக்கும், கூட்டணியில் இருந்து வெளியேறிய ஒடிசா மாநில முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் இருவரும் தங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி இருக்கிறார்கள்.

இந்த சேவையை வழங்கிய இருவருக்கும் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்.

பீஹார் மாநிலத்தில் ஆட்சிக்கு வருவதற்கு முன் இருந்த பாழடைந்த சாலைகள், பள்ளிகள் மற்றும் கட்டிடங்களை, ஆட்சிக்கு வந்த பின் புதுப்பித்து தரமாக்கி, மாநிலத்தை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றதில் முக்கிய பங்கு வகிப்பவர் நிதிஷ்குமார்.

அதேபோல், ஒடிசாவில் பல ஆண்டுகள் முதல்வராக இருந்து சேவையாற்றிய நவீன் பட்நாயக், குறிப்பிடத்தக்கவர். இவர்கள் இருவரும் பாரத ரத்னா போன்ற உயரிய கவுரத்திற்கு தகுதியானவர்கள் என கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.