அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீ…5 பேர் பலி
5 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீ…5 பேர் பலி
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். கடற்கரையில் தொடங்கிய தீ, சக்திவாய்ந்த கடலோர காற்று காரணமாக நகரம் முழுவதும் வேகமாக பரவியுள்ளது.
தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் தீயை அணைக்கவும், ஆபத்தில் இருப்பவர்களைக் காப்பாற்றவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் எண்ணற்ற வீடுகள், கட்டிடங்கள் மற்றும் சுமார் 10,000 ஹெக்டேர் நிலம் சாம்பலாக்கப்பட்டுள்ளது.
இந்த காட்டுத்தீயால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.