ஹமாசுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்
பேச்சுவார்த்தையில் பாதிப்பை ஏற்படுத்த தான் விரும்பவில்லை
![ஹமாசுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்](https://channel5tamil.com/uploads/images/202501/img_677e4cfcec9097-23867382-86504709.gif)
ஹமாசுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்
பணய கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால் மத்திய கிழக்கில் மோதல் வெடிக்கும் என, அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் தாக்குதல் நடத்திய நிலையில், அதில் 250க்கும் மேற்பட்டோரை காசா முனைக்கு பணயக் கைதிகளாக கடத்திச் சென்றது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், பேச்சுவார்த்தையில் பாதிப்பை ஏற்படுத்த தான் விரும்பவில்லை என்றும், தான் அதிபராக பொறுப்பேற்கும் முன் பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும், ஹமாசுக்கு கெடு விடுத்துள்ளார்.