உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நெதன்யாகு….ஹமாசை அழிக்கும் வரை ஓய மாட்டோம் என திட்டவட்டம்!

இஸ்ரேல் ஒருபோதும், வளைந்து கொடுக்காது

Sep 27, 2025 - 14:52
Sep 27, 2025 - 14:55
 26
உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நெதன்யாகு….ஹமாசை அழிக்கும் வரை ஓய மாட்டோம் என திட்டவட்டம்!
உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நெதன்யாகு….ஹமாசை அழிக்கும் வரை ஓய மாட்டோம் என திட்டவட்டம்!

உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நெதன்யாகு….ஹமாசை அழிக்கும் வரை ஓய மாட்டோம் என திட்டவட்டம்!

காசாவில் நிகழ்ந்து வரும் கொடூரமான போரை நிறுத்த வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் வேலையில் ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக அழிக்கும் வரை போரை நிறுத்த மாட்டேன் என உலக தலைவர்கள் மத்தியில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து இவர் பேசியது உலகளவில் கவனம் ஈர்த்ததோடு, அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கு இடையே, காசா பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே, 2 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது.

இந்த போரால் காசாவின் பெரும் பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

இருந்த இடமே தெரியாமால் பாதி இடங்கள் அழிந்து விட்டன. அதே போல் ஏராளமான அப்பாவி மக்களும், குழந்தைகளும் பலியாகி உள்ளனர்.

நாளுக்கு நாள் அங்கே உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் இரு தரப்பும் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

அதே போன்று பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டுமென பல நாடுகள் அறிவித்து வருகின்றனர்.

குறிப்பாக பிரான்ஸ் உள்ளிட்ட முக்கியமான நாடுகள் அறிவித்துள்ளது இஸ்ரேலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பரபரப்ப்பான சூழலுக்கு மத்தியில் அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐ.நாவின் 80வது பொதுசபை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச தொடங்கியதும், பல நாடுகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் காசாவின் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வெளிநடப்பு செய்தனர்.

இப்படி பல்வேறு எதிர்ப்புகளும் மத்தியில் சாபம் என்ற தலைப்பிலான வரைப்படத்தை உயர்த்தி பிடித்து உரையாற்ற தொடங்கினார்.

காசாவிம் ஹமாசுக்கு எதிரான போரை நிறுத்த வேண்டும் என மேற்காசிய நாடுகள் கூறுகின்றன.

அந்த நாடுகளின் தலைவர்கள் சிலர் அழுத்தத்தினால் வளைந்து கொடுத்திருக்கலாம், ஆனால், இஸ்ரேல் ஒருபோதும், வளைந்து கொடுக்காது என பகிரங்கமாக பேசியுள்ளார்.

அதே போல பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்திருக்கும் உங்கள் முடிவு யூதர்களுக்கு எதிராகவும், அப்பாவி மக்களுக்கு எதிராகவும் செயல்படும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயலாக உள்ளது அதுமட்டுமின்றி,

அவர்களுக்கு ஒரு அரசை கொடுக்க வேண்டுமென நினைக்கும் அரசை கண்டிக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

தனி நாடு அங்கீகாரம் என்பது பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிப்பதாகவே உள்ளது. இது ஒரு போதும் நடக்காது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழித்த பிறகு தான் இந்த போர் முடிவுக்கு வரும் என இவர் பேசியுள்ளது உலக தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.