களத்தில் இறங்கிய திமுக…. இன்று ஒடிசா நாளை கொல்கத்தா!

ஒடிசா செல்லும் 2 திமுக பிரதிநிதிகள்

Mar 11, 2025 - 12:13
 2
களத்தில் இறங்கிய திமுக…. இன்று ஒடிசா நாளை கொல்கத்தா!

களத்தில் இறங்கிய திமுக…. இன்று ஒடிசா நாளை கொல்கத்தா!

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக ஆதரவு திரட்ட திமுக சார்பில் ஒடிசா செல்லும் 2 பிரதிநிதிகள்.

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் எம்.பி தயாநிதி மாறன் ஒடிசா செல்கின்றனர்.

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான விவகாரத்தில் இதனால் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒருங்கிணைத்து அதற்கு எதிரான குரலை வலுப்படுத்துவதற்கான முயற்சியில் திமுக ஈடுபடுகிறது.

அந்த வகையில், மற்ற மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களை சந்தித்து ஆதரவை திரட்டுவதற்காக அமைச்சர்கள், எம்.பிக்களுக்கு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அண்மையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன.

இன்று ஒடிசா சென்று நவீன் பட்நாயக் உள்ளிட்டோரை சந்திக்கின்றனர்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் அமைச்சர்கள் பிரித்து செயல்படும் முறைகள் குறித்தும் ஆலோசனை குறித்தும் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை.

நாளை பொன்முடி மற்றும் அப்துல்லா கொல்கத்தா செல்ல உள்ளதாகவும் தகவல்.