சீமானின் பேச்சு நாகரீகத்தின் எல்லையை மீறி உள்ளது – திருமாவளவன்
அண்ணாமலை ஆதரிக்கிறார் என்றால் அது அவர் பேசும் அரசியலை குறிக்கிறது
சீமானின் பேச்சு நாகரீகத்தின் எல்லையை மீறி உள்ளது – திருமாவளவன் கண்டனம்
சீமானுடைய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பேசி விசிக தலைவர் திருமாவளவன்,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். அதற்கு விசிக தீவிரமாக தேர்தல் பணியாற்றும். அண்மைக் காலமாக பெரியார் மீது ஆதாரம் இல்லாத அவதூறுகள் பரப்பப்பட்டு வருகிறது. மொழியின் பெயரால் இனத்தின் பெயரால் அரசியல் செய்யும் கட்சிகள் பெரியாரை இழிவுபடுத்துகிறது. சீமானின் பேச்சு நாகரீகத்தின் எல்லையை மீறி உள்ளது.
அவர் பேச்சு அரசியலுக்கு எதிராக உள்ளது. இந்திய அளவில் பேசப்படும் மதவழி தேசியம் முதன்மையான எதிரியாக இருக்க முடியும். தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் தனது இறுதி மூச்சு வரையில் தீவிரமாக களப்பணி ஆற்றிய பெருமதிப்புக்குரிய தந்தை பெரியாரை கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல. இந்த போக்கை அவர் கைவிட வேண்டும்.
அண்ணாமலை ஆதரிக்கிறார் என்றால் அது அவர் பேசும் அரசியலை குறிக்கிறது. இதனை சீமான் புரிந்து கொள்ள வேண்டும். சீமான் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பெரியார் தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் கொண்டுள்ள அக்கறையினால் அவ்வாறு விமர்சனம் வைத்தார். பெரியார் பேசியதை தவறாக திரித்து பேசுகிறார்கள். தியாகத்தை கொச்சைப்படுத்துகிறார். அது ஏற்புடையதல்ல” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.