ஆர்வமோடு வாக்களிக்கும் வாக்காளர்கள்!

Oct 5, 2024 - 17:39
 6
ஆர்வமோடு வாக்களிக்கும் வாக்காளர்கள்!

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஹரியானாவில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.

90 சட்டமன்ற தொகுதிகளில் 101 பெண்கள் உட்பட மொத்தம் 1,031 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முதல்வர் நயாப் சிங் சைனி, துஷ்யந்த் சவுதாலா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். பதிவாகும் வாக்குகள் வரும் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

இதில் 464 பேர் சுயேச்சைகளாக போட்டியிடுகின்றனர்

115 வாக்குச்சாவடிகள் முழுவதும் பெண் ஊழியர்களும், 87 மாற்றுத்திறனாளி பணியாளர்களும், 114 வாக்குச்சாவடிகளில் இளைஞர்களலும் நிர்வகிக்கப்படுகின்றனர்.

மொத்தம் 20,632 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதில் 3,460 வாக்குச் சாவடிகள் முக்கியமானவை எனவும், 138 வாக்குச் சாவடிகள் ஆபத்து நிறைந்தவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் அங்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுமா? அல்லது காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் எழுந்துள்ளது.