ஏகாதசியில் உள்ள சிறப்புகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்…..

தாங்கள் செய்த பாவச்செயல்கள் மன்னிக்கப்பட்டு சங்கடங்கள் தீரும்

Jan 10, 2025 - 15:03
Jan 10, 2025 - 16:48
 4
ஏகாதசியில் உள்ள சிறப்புகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்…..

ஏகாதசியில் உள்ள சிறப்புகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்…..தாங்கள் செய்த பாவச்செயல்கள் மன்னிக்கப்பட்டு சங்கடங்கள் தீரும்! 

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து வைணவ திருக்கோவில்களில் லட்சகணக்கான பக்கதர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

வைகுண்ட ஏகாதசி ன்று விரதமிருந்து பெருமாளை தரிசனம் செய்தால் வேண்டிய அனைத்தும் நிறைவேறும் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

வைகுண்ட ஏகாதசி என்றவுடன் நினைவுக்கு வருவது ஸ்ரீரெங்கம்தான். 108 வைணவ தளங்களில் முதல் திவ்யதேசம் மற்றும் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்  கோவில்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சொர்கவாசல் அதிகாலையிலேயே திறக்கப்பட்டது.  இதில் லட்சக்கணக்கான பக்கதர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பூலோக வைகுண்டம் என்று அழகைப்படும் ஸஸ்ரீ ரெங்கத்தில் பெருமாள், காவேரி மற்றும் கொள்ளிடம் நடுவே பள்ளிக்கொண்ட பெருமாளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த 1000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வைணவ தலமாகும்.  

மாதங்களில் நான் மார்கழி' என்று கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறியுள்ளார் . வைகுண்ட ஏகாதசி வருவதால் வைஷ்ணவர்களுக்கும், ஆருத்ரா வருவதால் சைவர்களுக்கும் உகந்த மாதம் மார்கழி. ஏகாதசி திதி தோன்றியதும் இந்த மாதத்தில்தான் என்று நமது ஹிந்து புராணங்கள் கூறுகின்றது .

ஏகாதசி விரதம் என்பது  3 நாட்கள் இரருக்கக்கூடிய விரதமக்கும் அதாவது , தசமி திதியில் உபவாசஇருந்து , ஏகாதசி திதியில் பாராயணம் செய்து விரதத்தை நிறைவு செய்வது. இந்தாண்டு, ஜனவரி மாதம் 10ம் தேதி வெள்ளிக்கிழமை விடப்பட்டது.

மார்கழி மாதம் வளர்பிறை இந்துக்களால் ‘வைகுண்ட ஏகாதேசி’ யாக கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்த நாளுக்கு முன் 10 நாட்கள் ‘பகல் பத்து’ என்றும், பிந்தைய 10 நாட்கள் ‘இராப் பத்து’ என்றும் சிறப்பாக விழா நடத்தப்படுகிறது விழாவின் சிறப்பம்சமாக ஜனவரி 10 ஆம் தேதி அதிகாலையில் 4 மணிக்கு பரமபதவாசல்’ திறக்கப்பட்டது.

திருமாலின் இருப்பிடமான வைகுண்டத்தின் கதவுகள் வைகுண்ட ஏகாதேசி அன்று  திறக்கப்படுகிறது. இந்த நாளில் இரவு உறங்காமல், திருமாலின் புகழ் பாடி, அதிகாலை பெருமாள் கோயிலின் வடக்குதிசை கதவு எப்போதும் மூடி இருக்கும் ‘சொர்க்க வாசல்’ கதவு வழியாக சென்று இறைவனை வழிபடுவர்.

அப்படி செய்தால், தாங்கள் செய்த பாவச்செயல்கள் மன்னிக்கப்பட்டு சங்கடங்கள் தீரும் என நம்பப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசியையொட்டி தமிழ்நாட்டில் அனைத்து வைணவ கோவில்களிலும் சொர்க்கவாசல் சிறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக கொண்டாடப்படும் .

சொர்க்கவாசல் அன்று கோவில் அதிகாலை முதலே திறக்கப்பட்டு பல்வேறு அலங்காரம் மற்றும் சேவைகள் நடைபெறும்.