காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்கள் சேதம்
விவசாய பயிர்கள் சேதம் அடைந்ததற்கு உடனுக்குடன் இழப்பீடு வழங்கி வருகின்றனர்
காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்கள் சேதம்.
தமிழகத்தில் அதிகமான யானைகள் இருப்பது கிருஷ்ணகிரி மாவட்டம் தான். ஓசூர் வன சரகத்திற்கு உட்பட்ட. தேன்கனிக்கோட்டை வனச்சரகம். ஓசூர் வனச்சரகம். ராயக்கோட்டை வனச்சரகம் உள்ளது. இந்த வனச்சரகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உள்ளது. இந்த ஆண்டு மானாவாரி சாகுபடியில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் அவரை. துவரை. சோளம். ராகி. போன்ற பயிர்கள் தற்பொழுது அறுவடைக்கு வந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட கேரட்டி. சேசுராஜபுரம். கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. அதனால் யானைகள் அடிக்கடி வந்து விவசாய நிலத்திற்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது உண்டு.
ஐந்து நாட்களுக்கு முன்பு சேசுராஜபுரம் அருகே மூன்று காட்டு யானைகள் விவசாய நிலத்திற்குள் புகுந்து துவரைப் பயிர்களை சேதப்படுத்தியது. அந்த விவசாயிகள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் சேதமாகிய பயிர்களை பார்வையிட்டு உடனடியாக இழப்பீடு வழங்குவதற்கு ஏற்பாடு செய்தனர்.
இதனையடுத்து, ஓசூர் வனக்கோட்டம் ஒசூர். வன உயிரின காப்பாளர் திரு. பகான் ஜெகதீஷ் சுதாகர் உத்தரவின் பெயரில். அஞ்செட்டி வனச்சரகர். கோவிந்தன். வழிகாட்டுதல்படி. அஞ்செட்டி சேசுராஜபுரம். வனவர். கலைமணி. அஞ்செட்டி. வனவர். பாலகிருஷ்ணன். சேசுராஜபுரம் வனக்காப்பாளர் செல்வம். மற்றும் வன ஊழியர்கள். குழுவாக இணைந்து தொடர்ந்து இரவும் பகலமாக விவசாய நிலங்களுக்குள் வரும் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டி விடுகின்றனர்.
அது மட்டுமல்லாமல் விவசாய பயிர்கள் சேதம் அடைந்ததற்கு உடனுக்குடன் இழப்பீடு வழங்கி வருகின்றனர். வனத்துறையினர் பட்டாசுகள் வைத்தும், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு துரிதமாக வேலை செய்து வருவதை கண்டு கிராம மக்கள் வனத்துறையினருக்கு பாராட்டு தெரிவிக்கின்றனர்.