இதை ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள்….உங்கள் மனம் பக்குவப்படும்…!
நேர்த்தியும் ஒழுங்கும் தான் உன்னை வழிநடத்தும்

இதை ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள்….உங்கள் மனம் பக்குவப்படும்…!
> எதிலும் குறையை தேடுபவர்களுக்கு ஆயிரம் குறைகள் தெரியும். ஆனால் நிறையைக் காண உயர்ந்த மனம் போதும். அது இருக்கிறதா என்று எப்போதும் உங்கள் மனதிடம் கேளுங்கள்.
> தினமும் ஒரு நிமிடம் இப்படி சிந்தித்தால் மனம் பக்குவப்படுவதை உணர்வீர்கள்/
> நடப்பது எல்லாம் நன்மைக்கே என்ற மனநிலையில் இருங்கள். இல்லாவிட்டால் சுற்றி இருப்பவர்கள் உங்களை பலவீனப்படுத்தி விடுவார்கள்.
> எனவே எப்போதும் உற்சாகத்தோடு இருக்க பழகுங்கள். ஈடுபாட்டோடு பணியாற்றுங்கள்.
> இடம் அறிந்து சாமர்த்தியமாக செயல்படுங்கள்.
> வேகத்தை விட விவேகம் அவசியமானது.
> நேர்த்தியும் ஒழுங்கும் தான் உன்னை வழிநடத்தும்.
> பிறருடைய பாராட்டிற்காக எதையும் செய்ய கூடாது.
> சாதனையாளர்களை தான் நினைக்க வேண்டுமே தவிர வீண் புறம் பேசுபவர்களை அல்ல.