கலியுக கர்ணனுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி...!
அவர் மரணித்து இன்றோடு ஒரு ஆண்டு காற்றில் கரைந்து போனது
கலியுக கர்ணனுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.!
புரட்சிக் கலைஞர் கேப்டன் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர்,
சினிமாவிலும், அரசியலிலும் இளைஞர்களை வென்று தனது சிரிப்பால் ஒட்டுமொத்த மக்களையும் தன் வசம் கட்டிப்போட்டவர் விஜயகாந்த்.
சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் சொக்கத்தங்கமாய் விளங்கியவர்.
அனல் பறக்கும் பார்வை, தன்னம்பிக்கை, சிவந்த கண்கள், எளிமை, துணிச்சல், உதவி செய்யும் மாண்பு, மன்னிக்கும் பக்குவம் என மானிடப்பிறவியே ஆச்சர்யம் கொள்ளும் ஓர் அத்தியாயம் தான் கேப்டன் விஜயகாந்த்.
கலியுக கர்ணனின் இறப்புக்கு கண்ணீர் சிந்தாத மானிடப்பிறவியே இல்லை .
அவர் மரணித்து இன்றோடு ஒரு ஆண்டு காற்றில் கரைந்து போனது.
இல்லாமல், இருந்தும் மக்களோடு மக்களாய் தெய்வமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்
மாமனிதனுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.