அடி மேல் அடி வாங்கும் சீமான்... சீமான் கைது செய்யப்படுவது உறுதி?

கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

Feb 27, 2025 - 15:27
 8
அடி மேல் அடி வாங்கும் சீமான்... சீமான் கைது செய்யப்படுவது உறுதி?

அடி மேல் அடி வாங்கும் சீமான்...

சீமான் கைது செய்யப்படுவது உறுதி?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டிய போது, அந்த சம்மன் உடனடியாக கிழிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரிக்க போலீசார் சீமான் வீட்டிற்கு சென்ற நிலையில் திடீரென அவரின் பாதுகாவலர் கைத் துப்பாக்கியை எடுத்து நீட்டியதால் போலீசார் - பாதுகாவலர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்வதாக கூறி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் சீமானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இதனிடையே,சீமான் மனு தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர், விசாரணைக்காக வளசரவாக்கம் போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.

சீமான் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில்,  வளசரவாக்கம் காவல்துறை சார்பாக மீண்டும் சீமான் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அளிக்கப்பட்டது. இதனை நேரில் சென்று அளிப்பதற்காக சீமான் வீட்டிற்கு போலீசார் சென்ரா 
 போது  சீமானின்  பாதுகாவலர் கைத் துப்பாக்கியை எடுத்து நீட்டியதால் இரு தரப்பினரிடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
இதன் பின்னர், சீமானின் இரு காவலாளியை கைது செய்ததோடு, துப்பாக்கியையும் அதிகாரிகள் கைப்பற்றி சென்றனர்.

மேலும், சீமான் நாளை காலை விசாரணைக்கு ஆஜராகா விட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.