வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கல்பனா….. நான் உயிரோடு இருப்பதற்கு காரணமே என் கணவர் தான்!
எனக்கும் என் கணவருக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை, தனிப்பட்ட பிரச்சனையும் இல்லை

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கல்பனா….. நான் உயிரோடு இருப்பதற்கு காரணமே என் கணவர் தான்!
பாடகி கல்பனா தற்கொலை முயற்சி செய்து கொண்டதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் கல்பனா விளக்கம்.
என் கணவர் வெளியூரில் இருந்தாலும் என்னை சரியான நேரத்திற்கு மருத்துவமனையில் சேர்க்க பாடுபட்டவர் என் கணவர் தான் அதோடு மீடியா, போலீஸ் என அனைவரும் கஷ்டப்பட்டு காப்பாத்திருக்காங்க.
இதனால் மன அழுத்தம் அதிகமாகி சரியான தூக்கம் இல்லை தூங்க முடியாத பிரச்சனை இருப்பதால் மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன் .
எனக்கு இன்சோமியா பிரச்சனை இருப்பதால் அதற்கான மருந்தை அதிகமாக எடுத்துவிட்டேன் அதன் வீரியத்தால் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு நான் மயங்கிவிட்டேன்.
இன்று நான் உயிரோடு இருப்பதற்கு ஒரே காரணம் என் கணவர் அன்றைய தினம் எனக்காக அவர் மிகவும் கஷ்டபட்டார் எனவும், தயவு செய்து என்னை குறித்தும், என் கணவர் குறித்தும் தவறான வதந்திகளை பரப்பாதீர்கள் எனவும் பாடகி கல்பனா உருக்கமான வீடியோ பதிவிட்டுள்ளார்.