தற்போது…அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு... அரசியல் விமர்சகர்களை வெளுத்து வாங்கிய அ.மலை!

அதிமுகவை பற்றி நான் எதுவும் பேசவில்லை

Mar 8, 2025 - 18:22
 1
தற்போது…அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு... அரசியல் விமர்சகர்களை வெளுத்து வாங்கிய அ.மலை!

தற்போது…அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு....அரசியல் விமர்சகர்களை வெளுத்து வாங்கிய அ.மலை!

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்தித்து பேசி வருகிறார்.

வேலையில்லாத அரசியல் விமர்சகர்களை அமர்த்திக் கொண்டு விவாதம் செய்வதற்கு நானும் அண்ணன் எடப்பாடியும் தான் கிடைத்தோமா எனவும், நானும் தெளிவாக சொல்லிவிட்டேன் அண்ணன் எடப்பாடியும் தெளிவாக சொல்லிவிட்டார் நான் எங்கும் அதிமுக-வை குறிப்பிட்டு பேசவில்லை.

பாஜகவின் வளர்ச்சி, அரசியல் குறித்து மட்டும் தான் நான் பேசினேனே தவிர அதிமுகவை பற்றி நான் எதுவும் பேசவில்லை, அரசியல் விமர்சகர் என்னும் போர்வையில் பாஜகவை திட்டுவதை மட்டுமே நோக்கமாக வைத்துள்ளனர் பத்திரிக்கையாளர்கள் உட்பட.

எந்த அரசியல் விமர்சகர்களும் நடுநிலையாக பேசுவதில்லை அவர்களுக்கு திமுக ஜெயிக்க வேண்டும் என்பதே நோக்கமாக வைத்துள்ளனர். ஏசி அறையில் அமர்ந்துக்கொண்டு எங்களைப் பற்றி பேசுபவர்களுக்கு எங்களுடைய கஷ்டம் தெரியாது. களத்தில் இருக்கும் அரசியல் சிக்கல் எங்களுக்கு தான் தெரியும்.

அரசியல் விமர்சகர்களுக்கு அரசியல் பற்றி முழுமையாக என்ன தெரியுமா? அண்ணன் எடப்பாடி தெரிவித்த கருத்தில் எந்த தவறும் இல்லை என காட்டமாக பேசியுள்ளார் அண்ணாமலை.