பிரதான் பேசியதில் என்ன தவறு – அண்ணாமலை

யார் அந்த சூப்பர் முதல்வர் - அண்ணாமலை

Mar 10, 2025 - 19:15
 2
பிரதான் பேசியதில் என்ன தவறு – அண்ணாமலை

பிரதான் பேசியதில் என்ன தவறு – அண்ணாமலை

யார் அந்த சூப்பர் முதல்வர் என முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திமுக எம்.பிக்கள் நாகரீகமற்றவர் என கூறியதால் பிரதானுக்கும் திமுக எம்.பி கனிமொழிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

இதனையடுத்து, தனது வார்த்தைகளை திரும்ப பெறுவதாக தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.

எனினும், நாவடக்கம் தேவை என பிரதானுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பிரதான் பேசியதில் என்ன தவறு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுகிறோம் eன கூறும் திமுகவுக்கு, யார் அந்த மக்கள்? எனவும், உங்கள் மகன், மகள், மருமகன், தனியார் சிபிசிஎஸ்சி மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் நடத்தும் உங்கள் கட்சியினரும் அவர்களது உறவினர்களுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஏழை, எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். உங்கள் அரசியல் சாயம் வெளுத்துவிட்டது. ஸ்டாலின் அவர்களே இனியும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.