நான் துணை முதலமைச்சராக போவதாக வரும் செய்திகள் வதந்தி |  Minister Udhayanidhi Stalin Stage Speech

திமுக இளைஞரணியின் 45வது தொடக்க விழா, சென்னை தேனாம்பேட்டையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. 

Jul 20, 2024 - 21:35
 19
நான் துணை முதலமைச்சராக போவதாக வரும் செய்திகள் வதந்தி |  Minister Udhayanidhi Stalin Stage Speech

நான் துணை முதலமைச்சராக போவதாக வரும் செய்திகள் வதந்தி | 


திமுக இளைஞரணியின் 45வது தொடக்க விழா, சென்னை தேனாம்பேட்டையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. 

தொடக்க விழா நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது:

"மக்களை சந்திப்பதற்கு அரசியல் களம் எவ்வளவு முக்கியமாக இருக்கிறதோ அதேபோல் இன்று சமூக வலைத்தளங்களும் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக, பாஜக பொய்களை பரப்பி, பொய்களை மட்டுமே பேசி அரசியல் செய்கிறது. 

"எனக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்று இங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பத்திரிகைகளில் வருகின்ற கிசுகிசுக்கள், வதந்திகளை எல்லாம் படித்துவிட்டு வந்து நாமும் ஒரு துண்டு போட்டு வைப்போம் என்ற அடிப்படையில் இங்கு பேசியிருக்கிறீர்கள். தலைவர் ஸ்டாலின் எந்த பொறுப்புக்கு சென்றாலும், இளைஞரணி செயலாளர் என்பது தான் எனது மனதிற்கு மிக மிக நெருங்கிய பொறுப்பு என்று கூறுவார். அதேபோல துணை முதலமைச்சராக ஆகப்போகிறீர்களா என்று பத்திரிகை நண்பர்கள் என்னிடம் பலமுறை கேட்டபோது, எல்லா அமைச்சர்களும் எங்களுடைய முதலமைச்சருக்கு துணையாக தான் இருப்போம் என்று சொன்னேன். அதேபோல இங்கு வந்திருக்கக்கூடிய அத்தனை அமைப்பாளர்களும் நம்முடைய முதலமைச்சருக்கு துணையாகத்தான் இருப்போம். எவ்வளவு பெரிய பொறுப்பு வந்தாலும், என்னுடைய மனதிற்கு மிக மிக நெருங்கிய பொறுப்பு இளைஞரணி செயலாளர் என்ற பொறுப்பு தான். எனவே எந்த பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறந்துவிட மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

புதுமை பெண் திட்டத்தால் ஆண்டு தோறும் இரண்டரை லட்சம் மாணவிகள் பயனடைகின்றனர். தற்போது மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம் ஆகஸ்ட மாதத்தில் இருந்து விரிவுபடுத்தப்பட உள்ளது. 2026ல் என்ன நடந்தாலும், என்ன கூட்டணி வந்தாலும் வெற்றியை சூடப்போவது திமுக தான். மீண்டும் தமிழகத்தை ஆளப்போவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான்" என்றார்.