பூமிக்கு திரும்பிக் கொண்டிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்…தொடர்ந்து கண்காணித்து வரும் நாசா!

பூமிக்கு வந்து சேரும் காட்சிகள் அனைத்தையும் நாசா நேரடி ஒளிபரப்பு

Mar 18, 2025 - 16:09
 14
பூமிக்கு திரும்பிக் கொண்டிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்…தொடர்ந்து கண்காணித்து வரும் நாசா!

பூமிக்கு திரும்பிக் கொண்டிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்…தொடர்ந்து கண்காணித்து வரும் நாசா!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் மூலமாக பூமிக்கு சுனிதா வில்லியம்ஸ் தமது குழுவினருடன் புறப்பட்டார்.

அமெரிக்க விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு செய்ய கடந்தாண்டு ஜூன் 5ம் தேதி சென்றனர். அவர்களின் பயணம் 10 நாளாக முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த 10 மாதங்களாக அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை. அவர்களை அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் மூலம் விண்வெளி வீரர்கள் குழு சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றது.

 

இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் மூலமாக பூமிக்கு சுனிதா வில்லியம்ஸ் தமது குழுவினருடன் புறப்பட்டார்.

 

இந்திய நேரப்படி நாளை (மார்ச் 19) அதிகாலை 3.27 மணிக்கு அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் தரையிறங்குகின்றனர். இதன் மூலம் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவினரின் 9 மாத பயணம் முடிவுக்கு வருகிறது.

 

சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோருடன் நிக் ஹாவுக், ரஷ்யாவின் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோரும் பூமிக்கு திரும்புகின்றனர்.

 

இவர்களுடைய பயணம் தொடங்கி உள்ள நிலையில், அங்கு நடக்கும் நிகழ்வுகளை நாசா தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

அந்த வகையில், சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் பூமி திரும்புவதற்கான பயண ஏற்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பான வீடியோவை நாசா வெளியிட்டு உள்ளது.

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் விடுவிக்கப்படும் காட்சி. பூமிக்கு வந்து சேரும் காட்சிகள் அனைத்தையும் நாசா நேரடி ஒளிபரப்பு செய்வது குறிப்பிடத்தக்கது.