அதிபர் ட்ரம்பிற்கு கொலை மிரட்டல்?

Oct 14, 2024 - 17:38
 10

முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை 3வது முறையாக படுகொலை செய்ய முயற்சிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தின் கோச்செல்லாவில் டிரம்ப் பேரணி நடைபெற்றது.

இந்த இடத்திற்கு அருகில் சட்டவிரோதமாக துப்பாக்கிகளுடன் உலா வந்த சிலர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில், 49 வயது வெம் மில்லர் என்ற நபர் 2 துப்பாக்கிகளுடன் பிடித்துள்ளனர். இதனிடையே, ட்ரம்ப்பிற்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் அவர் தற்போது பாதுகாப்புடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.