பாஜக தலைவர்கள் கைது! கோழைத்தனமா செயல்படாதீங்க - கொந்தளித்த அண்ணாமலை!

பாஜக தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்த போலீசார்

Mar 17, 2025 - 11:53
 5
பாஜக தலைவர்கள் கைது! கோழைத்தனமா செயல்படாதீங்க - கொந்தளித்த அண்ணாமலை!

பாஜக தலைவர்கள் கைது!

கோழைத்தனமா செயல்படாதீங்க - கொந்தளித்த அண்ணாமலை!

பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் இல்லம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட போவதாக பாஜக முன்னதாகவே போராட்டம் அறிவித்திருந்தது.

பாஜக மாநில செயலாளர் வினோஜ் செல்வத்தை பாண்டி பஜார் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பாஜக முக்கியத் தலைவர்களின் வீடு என பல்வேறு இடங்களிலும் சுமார் 500 காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழிசை ஆர்ப்பாட்டத்திற்காக வீட்டை விட்டு கிளம்பிய நிலையில் அங்கேயே கைது செய்யப்பட்டு அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, பாஜக தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மக்களின் ஜனநாயக உரிமையை வேரறுக்க துடிக்கும் பாசிச அரசின் கேடுகெட்ட டாஸ்மாக் ஊழலை கண்டித்து அறவழியில் போராட முயன்ற பாஜக தலைவர்களையும் தொண்டர்களையும் வீட்டுச் சிறையில் வைப்பது்ம், அடிப்படையின்றி அவர்களை கைது செய்வதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என வானதி சீனிவாசம் பதிவிட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள் எனவும்,

ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்தால்தானே, உங்களால் இது போன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது.

தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஒருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும் எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்ற அண்ணாமலை செல்லும் வழியிலேயே பாதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.