பாஜகவின் சுயரூபத்தை இனிமேல் பார்ப்பீங்க…தமிழக அரசுக்கு சவால் விடுத்த அண்ணாமலை!
முடிஞ்சா கைது பன்னிக்கோங்க

பாஜகவின் சுயரூபத்தை இனிமேல் பார்ப்பீங்க…தமிழக அரசுக்கு சவால் விடுத்த அண்ணாமலை!
முடிஞ்சா கைது பன்னிக்கோங்க - அண்ணாமலை
தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை செய்தால் ராஜமரியாதை, கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் நஷ்டஈடு, மணல் கடத்தினால் ராஜமரியாதை ஆனால், நியாயத்தை தட்டி கேட்டால் அவர்களை குற்றவாளிகளை போல் நடத்துகின்றனர்.
மாலை 5.30 மணிக்கு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தையே மூடிய பிறகு எங்களை மட்டும் இரவு 7 மணிவரை காவலில் வைத்திருக்கக் காரணம் என்ன?
எங்களைப் பொறுத்தவரை இந்த போராட்டம் தீவிரப்படுத்தப்படும். இனிமேல் தேதி சொல்லாமல்தான் அனைத்து போராட்டத்தையும் மேற்கொள்வோம்.
காவல்துறையின் மீதான நம்பிக்கையை பாஜக இழந்துவிட்டது. இனி எந்த ஆர்ப்பாட்டத்திற்கும் பாஜகவினர், காவல்துறையிடம் கடிதம் அளிக்க மாட்டோம்.
இதுவரை கடந்த 7 முறை அளித்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்ட அனைத்து கடிதத்தையும் நிராகரித்துள்ளனர்.
ஜனநாயகத்தின் குரல்வளையாக இருக்க வேண்டிய காவல்துறை திமுகவின் ஏவல்துறையாக மாறியுள்ளதால், அடுத்த ஒரு வாரத்தில் தேதி குறிப்பிடாமல் போராட்டம் மேற்கொள்ள இருக்கிறோம்.
முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பாஜக மகளிரணியினர் ஆணி அடித்து மாட்டப் போகிறார்கள்.
அது மட்டுமல்லாமல், ஏப்ரல் முதல் வாரத்தில் டாஸ்மாக் கடைகளை பூட்டுப் போட்டு போராட்டம் நடத்தவுள்ளோம் நானும் அந்த போராட்டத்தில் கலந்து கொள்ள போகிறேன்.
இந்த 2 போராட்டமும் அடுத்த 15 நாட்களுக்குள் இரண்டு தேதிகளில் நடைபெறும் வருகிற 22ஆம் தேதி ஒரு போராட்டம் சென்னையில் நடைபெற வாய்ப்புள்ளது.
காவல்துறை பாஜகவிற்கு மரியாதை அளிக்கவில்லை என்றால் பாஜகவும் காவல்துறைக்கு மரியாதை கொடுக்காது.
பாஜக எப்போதும் பேருந்தை உடைத்ததில்லை, யாரையும் தீயிட்டு கொளுத்தியதில்லை, நடு ரோட்டில் யாரையும் வெட்டாமல் அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.
அடுத்த 2 போராட்டமும் கட்டாயம் நடக்கும் காவல்துறை முடிந்தால் எங்களைத் தடுத்துப்பார்க்கட்டும் என அண்ணாமலை தமிழக அரசுக்கு சவால் விடுத்துள்ளார்.
பாஜகவுக்கு மரியாதை கொடுக்காத காவல்துறை அனைவரும் தமிழ்நாட்டில் இன்று முதல் தூங்கக்கூடாது விதவிதமான போராட்டங்களை மே 2026 வரை நடந்து கொண்டே இருக்கவேண்டும்.